மேற்படி எண்ணைத் தன்மையுடைய மண்ணைக் கொண்ட பிராந்தியத்தில் பரவி வரும் காட்டுத் தீயால் பாடசாலையொன்று உட்பட 1,600 க்கு மேற்பட்ட கட்டடங்கள் தீக்கிரையாகியுள்ளன.
மக்முர்ரே நகரில் இடம்பெற்றுள்ள இடம்பெயர்வானது அல்பேர்ட்டா பிராந்திய வரலாற்றில் இடம்பெற்ற மாபெரும் இடம்பெயர்வாக கருதப்படுகிறது.
அத்துடன் அந்தப் பிராந்தியத்திலுள்ள எண்ணெய்க் கம்பனிகள் தமது எண்ணை உற்பத்தியைக் குறைக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளாகியுள்ளன.
பல எண்ணெய் விநியோக கம்பனிகள் தமது எண்ணெய் விநியோகக் குழாய்களை மூடியுள்ளன.
இந்தக் காட்டுத் தீயில் சிக்கி எவரும் உயிரிழந்ததாகவோ அன்றி காயமடைந்ததாகவோ இதுவரை அறிக்கையிடப்படவில்லை.