கப்பலில் இருந்து கடலுக்குள் விழுந்த பெண் 38 மணி நேரத்துக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டார். சீனாவை சேர்ந்த பெண் பான். 32 வயதான இவர் ஜப்பானில் உள்ள பியூகுயோகாலில் இருந்து ஷாங்காய் நகருக்கு சொகுசு பயணிகள் கப்பலில் புறப்பட்டு வந்தார்.
ஷாங்காய் பகுதிக்கு வந்த போது கப்பலின் ஓரத்தில் நின்று கொண்டிருந்த அவர் கடலுக்குள் தவறிவிழுந்தார். அதை யாரும் கவனிக்கவில்லை. இதற்கிடையே கடலுக்குள் விழுந்த அவர் தண்ணீரில் மிதந்தபடியே இருந்தார். ஒரு மணி நேரம் அல்லது 2 மணி நேரம் அல்ல பல மணி நேரம் இரவு பகலாக மிதந்தார். அதுவரை அப்பகுதிக்கு கப்பலோ, படகோ வரவில்லை. 38 மணி நேரம் கழித்து ஒரு மீன் பிடி படகு அங்கு வந்தது.
அதில் பயணம் செய்தவர்கள் கடலில் மிதந்த அவரை பார்த்து மீட்டனர். பின்னர் அவர் கரைக்கு கொண்டு வரப்பட்டார். அவரது உடலில் ஜெல்லி மீன்கள் கொட்டியதால் சிறு காயங்கள் இருந்தன. சூரிய ஒளியின் வெயில் தாக்கத்தால் கைகளில் கொப்பளம் ஏற்பட்டிருந்தது. அதற்காக ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சை மேற் கொண்டார்.