கப்ர் நபால் கிராமத்தில் அரசு சார்பில் விமான தாக்குதல்

சிரியாவில் அதிபர் பஸார் அல்-ஆசாத்திற்கு எதிராக கிளர்ச்சிப்படை சண்டையிட்டு வருகிறது. இதனால் அதிபருக்கு ஆதரவாக கடந்த ஆண்டில் இருந்து ரஷியா தீவிரவாதத்தை அழித்தே தீருவோம் என்று சண்டையிட்டு வருகிறது.

சிரிய ராணுவத்துடன் இணைந்து ரஷியா இட்லிப் மற்றும் ஹோம்ஸ் மாகாணத்தில் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது.  இந்நிலையில் இட்லிப் மாகாணத்தில் உள்ள கப்ர் நபால் கிராமத்தில் அரசு சார்பில் விமான தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர் என்று சிரியாவிற்கான பிரிட்டனைச் சேர்ந்த மனித உரிமை மையத்தின் அதிகாரி தெரிவித்துள்ளார்.

கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து இதுவரை சுமார் 3 லட்சம் பேர் சிரியாவில் உயிரிழந்துள்ளனர் என்பது சோகமாக விஷயம்.

அதிபர்ஆசாத்ஆதரவுகிளர்ச்சிபடைசண்டை அதிபர்சிரியாபஸார்அல்
Comments (0)
Add Comment