இங்கிலாந்து பிரதமர் டேவிட் கமரூனுக்கு மர்ம நபர் ஒருவர், தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து பிரதமர் அலுவலகம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தியில், பிரதமர் டேவிட் கமரூனுக்கு தொலைபேசியில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
அது என்ன மிரட்டல் என்பது பாதுகாப்பு கருதி ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமருக்கு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவத்தையடுத்து இங்கிலாந்தில் உள்ள அரசு அலுவலகங்கள் உள்ள பகுதிகளில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், பிரதமருக்கு மிரட்டல் விடுத்தது யார், எங்கிருந்து மிரட்டல் வந்தது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.