இது குறித்து அவர் கூறுகையில், மேற்கு வங்க தேர்தல் பிரசாரத்தில், இடதுசாரிக் கட்சியை ஆதரிக்கும் மாணவர்கள் அனைவரும் கன்னையாவுடன் இணைந்து பணியாற்றுவார்கள். முதல் முறையாக, இடது சாரிகளின் இளைஞர்களின் சக்தியை தேசம் பார்க்க உள்ளது என்றும் அவர் கூறினார்.
ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் அமைப்புத் தலைவரான கன்னையா குமார் தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன்புதான் ஜாமீனில் வெளியே வந்தார்.