கருப்பின மக்களிடையே கோபமாக பேசிய கிளின்டன்

அமெரிக்காவில் போராட்டம் நடத்தும் கருப்பின மக்களிடையே கோபமாகப் பேசிய பில் கிளிண்டனுக்கு எதிராக சர்ச்சைகள் கிளம்பியுள்ளன.  அமெரிக்காவில் கருப்பின மக்களுக்கு எதிராக வெள்ளையின மக்கள் ஆதிக்கம் செலுத்தி வருவதாக புகார்கள் நிலவி வருகின்றன.  

போலீசாரின் பல்வேறு துப்பாக்கி சூடுகளில் ஆயுதமற்ற கருப்பின இளைஞர்கள் கொல்லப்பட்டதும் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.   இந்நிலையில், கருப்பின உயிர்களும் மதிக்கப்படவேண்டும் என்ற பெயரில் தொடங்கப்பட்ட அமைப்பு ஒன்று நாடு முழுவதும் கருப்பின மக்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது.

இவர்களின் போராட்டம் குறித்துப் பேசிய முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், கருப்பின இளைஞர்கள் கொலை மற்றும் பல்வேறு செயல்களில் ஈடுபடுவது குறித்து இவர்கள் கவலைப்படுவது இல்லை எனக் கருத்து தெரிவித்துள்ளார்.   இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கிளிண்டனின் இந்த கருத்து, அதிபர் தேர்தலுக்காகப் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் ஹிலாரிக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது.

அமெரிக்காகருப்பினமக்கள்கோபம்பில்கிளின்டன்போராட்டம்
Comments (0)
Add Comment