சர்வதேச நாடாளுமன்ற தலைவர்களுக்கான ஐ.நா மாநாட்டில் உரையாற்றிய மக்களவை தலைவர் சுமித்ரா மகாஜன், காஷ்மீரில் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற பாகிஸ்தானின் கோரிக்கையை நிராகரித்தார்.
ஜம்மு – காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்தப் பகுதி என்றும், பல ஆண்டுகளாக ஜனநாயக முறைப்படி அரசுகள் தேர்ந்தெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். இல்லாதப் பிரச்னையை இருப்பதாகக் கூறி, சர்வதேச அரங்கில் காஷ்மீர் விவகாரத்தை பாகிஸ்தான் எழுப்பி வருவதாகவும் சுமித்ரா மகாஜன் குற்றம்சாட்டினார்.
நேற்று முன்தினம் ஐ.நா.வில் பேசிய பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் துணைத் தலைவர் ஜாவத் அப்பாஸி, ஐ.நா தலைமையில் சுதந்திரமான, பாரபட்சமற்ற பொது வாக்கெடுப்பை காஷ்மீரில் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.