எனவே கடன் கொடுத்த நாடுகள் கிரீஸ் நாட்டில் சிக்கன நடவடிக்கைளை மேற்கொள்ளும்படி சில நிபந்தனைகளை விதித்தன. இந்த நிபந்தனைகளை ஏற்பதா? இல்லையா? என்பது குறித்து பொதுமக்களிடம் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. அதில் நிபந்தனைகளை ஏற்க வேண்டாம் என பெரும்பாலான மக்கள் வாக்களித்தனர்.
இதன் காரணமாக ஐரோப்பிய யூனியனில் இருந்து கிரீஸ் நாடு வெளியேறும் நிலை ஏற்பட்டது. மேலும் ஐரோப்பிய நாணயமான யூரோவை பயன்படுத்த முடியாத நிலையும் உருவாகி உள்ளது. இதற்கிடையே நேற்று பாராளுமன்றத்தில் பிரதமர் அலெக்சிஸ் டிசிபிராஸ் உரை நிகழ்த்தினார்.
அப்போது அவர் பேசியதாவது:–
நாடு தற்போது சிக்கியுள்ள நெருக்கடியில் இருந்து நிச்சயமாக மீண்டு விடும். அதற்கான நடவடிக்கைகளை நாம் தீவிரமாக எடுத்து வருகிறோம். யாருடைய நிபந்தனைகளுக்கும் நாம் அடிபணிய தேவையில்லை. தேவைப்பட்டால் யூரோ நாணயத்தை பயன்படுத்துவதில் இருந்து வெளியேறுவதற்கும் நாம் தயாராக இருக்கிறோம்.
நாட்டில் பல மறுசீரமைப்புகள் செய்வதன் மூலம் நிச்சயம் நாம் பழைய நிலைக்கு திரும்புவோம். இதற்காக சில மாற்றங்களை கொண்டுவர திட்டமிட்டுள்ளோம். இதற்கு மக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும். எந்த சூழ்நிலையிலும் நம் நாட்டின் இறையாண்மை காப்பாற்றப்படும்.
நாட்டில் உணவு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லை. நமக்கு தேவையான அளவிற்கு எல்லாமே இருப்பில் உள்ளது. மக்களுக்கு பெரிய பாதிப்பு இல்லாமல் பாதுகாக்க எல்லா நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று பிரதமர் அலெக்சிஸ் தெரிவித்துள்ளார்.