ஆப்கானிஸ்தானில் கடந்த 2001-ம் ஆண்டு தலிபான்களின் ஆட்சி அமெரிக்க தலைமையான நேட்டோபடை தாக்குதலால் வீழ்த்தப்பட்டது. பின்னர் அங்கு தேர்தல் மூலம் ஜனநாயக அரசு அமைக்கப்பட்டது. அதை தொடர்ந்துகடந்த (2015) ஆண்டு அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ படைகள் வெளியேறின. அதன்பின்னர் அடங்கி இருந்த தலிபான்கள் மீண்டும் வீறுகொண்டு எழ தொடங்கினர்.
அவர்களை அமெரிக்க ராணுவ உதவியுடன் ஆப்கானிஸ்தான் படைகள் அடங்கி ஒடுக்க தீவிர முயற்சி மேற் கொண்டுள்ளனர். இந்த நிலையில், குண்டூஷ் மாகாணத்தில் வடகிழக்கு பகுதியில் உள்ள கான் அபாத் என்ற மாவட்டம் முழுவதையும் சேர்த்து கைப்பற்றினர். அம்மாவட்டத்தின் தலைநகரில் தீவிரவாதிகள் பலமுனைத் தாக்குதல்களை நடத்தினர். அவற்றை தாக்கு பிடிக்க முடியாத ராணுவம் பின் வாங்கியது. இதை தலிபான் தீவிரவாதிகளின் செய்தி தொடர்பாளர் ஷபியுல்லா முஜாகித் உறுதி செய்துள்ளனர்.
முழு மாவட்டத்தையும், ராணுவ வாகனங்கள் மற்றும் ஆயுதங்களையும் கைப்பற்றி விட்டோம் என கூறினார். குண்டூஷ் மாகாண கவுன்சில் தலைவர் முகமது யூசுப் கூறும் போது, தாக்குதலை தொடர்ந்து அங்கிருந்து நூற்றுக்கணக்கான பொது மக்கள் வெளியேறி கூட்டம் கூட்டமாக வேறு இடங்களில் சென்று விட்டதாக தெரிவித்துள்ளார்.