குழந்தைகள் உட்பட, 15 பேரை தலிபான் பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றுள்ளனர்

ஆப்கானில், பஸ்களை தடுத்து நிறுத்தி, பயணிகளை கீழே இறக்கி, எவ்வித காரணமும் கூறாமல், குழந்தைகள் உட்பட, 15 பேரை தலிபான் பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றுள்ளனர். அதிபர் ஹமீத் கர்சாய் தலைமையிலான ஆப்கனின் கோர் மாகாணத்தில், பயணிகள் பயணம் செய்த பஸ்கள் இரண்டை தடுத்து நிறுத்திய தலிபான் பயங்கரவாதிகள், அதிலிருந்த பயணிகளை கீழே இறக்கினர். பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் என அனைவரும் வரிசையில் நின்றதும், அவர்கள் முன் வந்து நின்ற இயந்திர துப்பாக்கி ஏந்திய பயங்கரவாதிகள், அப்பாவி பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாக சுட்டனர்.

மார்பிலும், தலையிலும், குண்டுகள் பாய்ந்து, 11 ஆண்கள், நான்கு பெண்கள், ஒரு குழந்தை என, 15 பேர் அந்த இடத்திலேயே இறந்தனர். சுற்றிலும் பயங்கரவாதிகள் நின்றிருந்த போதிலும், அவர்கள் பிடியிலிருந்து ஒருவர் தப்பி ஓடி விட்டார். அவர் கொடுத்த தகவலின் படி, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உயிரற்ற உடல்களை மீட்டனர். எனினும், இந்த படுகொலைகளுக்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என, தலிபான் பயங்கரவாதிகள் கூறியுள்ளனர்.

இந்த கொடூரம் நிகழ்ந்த நாளிலேயே, ஹெராத் நகரில், சமூக சேவையில் ஈடுபட்டிருந்த பின்லாந்து நாட்டு பெண்கள் இருவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்; தக்கார் மாகாணத்தில், வெடிகுண்டுகள் நிரப்பிய மோட்டார் பைக்கில் வந்த இருவர், பைக்கை வெடிக்கச் செய்து, ஆறு பேரை கொன்றனர். இந்த ஆண்டின் ஆறு மாதங்களில், 4,900 பேர் ஆப்கனில் வெடிகுண்டுகள் மற்றும் துப்பாக்கிச் சூட்டால் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்பாவிஇயந்திரஏந்தியகண்மூடித்தனமாகசுட்டனர்.துப்பாக்கிபயங்கரவாதிகள்பொதுமக்கள்மீது
Comments (0)
Add Comment