கேரளாவில் தெருநாய்கள் கடித்து மூதாட்டி பலி!

கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரம் உள்பட பல மாவட்டங்களில் தெருநாய்களின் தொல்லை சமீபகாலமாக அதிகரித்துள்ளது. இந்நிலையில், திருவனந்தபுரம் அருகேயுள்ள கஞ்சிராம்குளம் கடற்கரை பகுதியில் நேற்று முன்தினம் இரவு நூற்றுக்கும் அதிகமான தெருநாய்களால் தாக்கப்பட்ட சிலுவம்மா என்ற 65 வயது மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.

அதேநாளின் பின்னிரவில் புல்லுவிலா கடற்கரை பகுதியில் வசித்துவரும் மற்றொரு 52 வயது பெண் தெருநாய்களிடம் கடிபட்டு, ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். மாநிலம் முழுவதும் சுமார் இரண்டரை லட்சம் தெருநாய்கள் இதுபோல் கட்டுப்பாடின்றி திரிந்துகொண்டிருக்கும் நிலையில், தெருநாய்கள் கடித்துக் குதறியதில் மீனவ குப்பத்தை சேர்ந்த மூதாட்டி சிலுவம்மா பலியான சம்பவம் தொடர்பான செய்திகள் பொதுமக்களை பீதிக்குள்ளாக்கியுள்ளது.

இவ்விவகாரம் தொடர்பாக நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கேரள முதல் மந்திரி பினராயி விஜயன், பொதுமக்களின் அச்சத்தை போக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்

ஆஸ்பத்திரிகடற்கரைகேரளாதெருநாய்கள்நடவடிக்கைநள்ளிரவுபொதுமக்கள்முதலமைச்சர்மூதாட்டி
Comments (0)
Add Comment