இது தொடர்பாக சாண்டியின் ஊடகத் தொடர்பாளர் பி.டி.சாக்கோ திருவனந்தபுரத்தில் கூறுகையில், “முதல்வர் உம்மன் சாண்டி, ஆளுநர் பி.சதாசிவத்தை இன்று வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு சந்தித்து தனது ராஜிநாமா கடிதத்தை அளிக்க இருகிறார்’ என்று தெரிவித்தார்.
கேரளத்தில் காங்கிரஸ் சார்பில் முதல்வராக இருந்தவர்களில் உம்மன் சாண்டி மட்டுமே முழுமையாக 5 ஆண்டுகள் பதவி வகித்தார். 2011-ஆம் ஆண்டு பேரவைத் தேர்தலில் 72 தொகுதிகளில் வெற்றி பெற்று காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைத்தது.
இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற தேர்தலில் இடதுசாரிக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.