கொழும்பில் வாழும் தமிழ் மக்களை பொலிஸார் பதிவு செய்கின்றனர்

கொழும்பில் மீண்டும் பதிவுகள்- வீடுகளுக்குச் செல்லும் பொலிஸார் படிவங்களை வழங்குகின்றனர். குடும்ப விபரங்கள் கேட்கப்படுகின்றன -யுத்தம் நடைபெற்ற காலத்தில் கொழும்பில் வாழும் தமிழ் மக்களை பொலிஸார் பதிவு செய்தது போன்று தற்போதும் பதிவுகள் மேற்கொள்ளப்படுவதாக முறையிடப்பட்டுள்ளது.

வெள்ளவத்தை பம்பலப்பிட்டி பிரதேசங்களில் வாழும் தமிழ் மக்களின் வீடுகளுக்கு சென்ற பொலிஸார் பாதுகாப்பு அமைச்சினால் தயாரிக்கப்பட்ட படிவங்களை பூர்த்தி செய்து கையளிக்குமாறு கேட்டுள்ளனர். வீட்டு உரிமையாளரின் பெயர் மற்றும் வீட்டில் வாடகைக்கு தங்கியுள்ளவர்களின் விபரங்கள் அனைத்தும் படிவங்களில் கோரப்பட்டுள்ளன. இதனால் கொழும்பில் வாழும் தமிழ் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

படிவங்களை பூர்த்தி செய்து கையளிக்காத மக்களின் வீடுகளுக்கு இன்று வெள்ளிக்கிழமை காலை (05.08.14 சென்ற பொலிஸார் படிவங்களை முழுமையாக பூர்தி செய்து கையளிக்க வேண்டும் என்றும் இல்லையேல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளதாக எமது கொழும்புச் செய்தியாளர் தெரிவித்தார்.

இது தொடர்பாக பொலிஸ் மா அதிபரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது தமிழர்கள் பதிவு செய்யப்படுவது தொடர்பாக அவர் எதுவும் கூறவில்லை. ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் இது குறித்து பொலிஸ் மா அதிபருடன் ஏற்கனவே தொடர்பு கொண்டு விளக்கம் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குடும்பகேட்கப்படுகின்றனகொழும்பில்செல்லும்படிவங்களைபதிவுகள்-பொலிஸார்மீண்டும்வழங்குகின்றனர்விபரங்கள்வீடுகளுக்குச்
Comments (0)
Add Comment