பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ நாளை புதுடெல்லிக்கு பயணம் செய்யவிருப்பதாக தெரியவந்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்தும் வகையிலேயே அவரது விஜயம் அமையும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டுநாட்கள் விஜயத்தை மேற்கொண்டு டெல்லிக்கு செல்கின்ற சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ, இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என்று தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் சிறீலங்காவுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் பிரேரணை தொடர்பிலும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் – இந்திய அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தவுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.