சர்வதேச சமூகத்தின் முன் மண்டியிட்டு படைவீரர்களை தூக்குமேடைக்கு அனுப்ப தயாரில்லை- நிமால் சிறிபால டி சில்வா

ஐ.நா மனிதஉரிமைப் பேரவையில் அமெரிக்கா சமர்ப்பிக்க உள்ள தீர்மானத்திற்கு எதிராக பல நாடுகள் இலங்கைக்கு ஆதரவளிக்கும் என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் தீர்மானத்தை முறியடிக்க பல நாடுகளின் ஆதரவு திரட்டப்பட்டுள்ளது. வரும் மார்ச் மாதம் இலங்கைக்கு எதிராக ஐ.நா மனிதஉரிமைப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியாக பல நாடுகளுக்கு விஜயம் செய்து, ஆதரவு திரட்டியுள்ளேன். சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த அரசாங்கம் எடுத்துக் கொண்டுள்ள முயற்சிகள் குறித்து விளக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவின் தீர்மானத்தை தோற்கடிக்கும் நோக்கில் இலங்கைக்கு ஆதரவளிக்க சில நாடுகள் ஏற்கனவே உறுதியளித்துள்ளன. சில நாடுகள் அமெரிக்கத் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்கும். இலங்கை சர்வதேச சமூகத்தின் முன்னிலையில் மண்டியிட்டு படைவீரர்களை தூக்குமேடைக்கு அனுப்பி வைக்கத் தயாரில்லை எனவும் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

நிமால் சிறிபால டி சில்வா
Comments (0)
Add Comment