சர்வதேச நிதியத்தின் தலைமை பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார் கிறிஸ்டியன் லகார்டே

ஐ.எம்.எப். என்றழைக்கப்படுகிற சர்வதேச நிதியத்தின் தலைமை பதவியான நிர்வாக இயக்குனர் பதவியில் தொடர்ந்து இரண்டாவது முறையாக கிறிஸ்டியன் லகார்டே (வயது 60) நியமிக்கப்பட்டுள்ளார்.

இவரது பதவிக்காலம் வரும் ஜூலை மாதம் 5-ந் தேதி தொடங்கி 5 ஆண்டுகள் ஆகும்.   இவரது நியமனத்துக்கான முடிவு, சர்வதேச நிதியத்தின் நிர்வாகக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்டது. ஐரோப்பிய பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட சிக்கலான காலகட்டங்களில் லகார்டே, சர்வதேச நிதியத்தின் தலைமை பொறுப்பை வகித்து சமாளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.   இவர் பிரான்சு நாட்டின் முன்னாள் நிதி மந்திரி ஆவார். 2011-ம் ஆண்டு இவர் முதன்முதலாக சர்வதேச நிதியத்தின் நிர்வாக இயக்குனர் பொறுப்புக்கு வந்தபோது, அந்த அமைப்பின் முதல் பெண் நிர்வாக இயக்குனர் என்ற சிறப்பை பெற்றார்.

ஐஎம்எப்கிறிஸ்டியன் லகார்டேசர்வதேசம்தலமைநியமனம்நிர்வாகம்பதவி
Comments (0)
Add Comment