அங்குள்ள ஷியா பிரிவினரின் மசூதியில் நேற்று 150-க்கும் மேற்பட்டோர் தொழுகை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது அங்கே புகுந்த தற்கொலை படை தீவிரவாதி அபு அமீர் அல்-நஜ்தி என்பவர், உடலில் கட்டி வந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தார். இந்த குண்டுவெடிப்பால் அந்தப் பகுதியே போர்க்களமாக மாறியது. இதில் 21 பேர் உடல் சிதறி உயிரிழந்ததுடன், ஏராளமானோர் காயம் அடைந்தனர்.
இந்நிலையில் இத்தாக்குதலுக்கு ஐ.எஸ். இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. அரேபிய தீபகற்பத்தில் இருந்து ஷியா பிரிவு முஸ்லிம்களை முற்றிலும் ஒழிக்கும் வரையில் இது போன்ற தாக்குதல் தொடரும் என தெரிவித்துள்ள அந்த இயக்கம், சவுதி அரேபியாவுக்கு இனி வரும் நாட்கள் இருண்ட நாட்களாகத்தான் இருக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.