சவூதியில் சித்திரவதைக்கு ஆளான இந்தியர்கள் விரைவில் நாடு திரும்புவர்: சுஷ்மா ஸ்வராஜ்

சவூதி அரேபியாவில் முதலாளியால் சித்திரவதைக்கு ஆளான இந்திய இளைஞர்கள் 3 பேரும் ஒரு வாரத்துக்குள் அழைத்து வரப்படுவார்கள் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார்.

சவூதி அரேபியாவில் சித்திரவதைக்கு ஆளான இந்திய இளைஞர்கள் குறித்து அந்நாட்டு காவல் துறையிடம் தெரிவிக்கப்பட்டது. அவர்களுடன்
மத்திய அரசு தொடர்பில் இருக்கிறது. ஒரு வாரத்துக்குள் அவர்கள் இந்தியா அழைத்துவரப்படுவார்கள் என்று அந்தப் பதிவில் சுஷ்மா குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தைச் சேர்ந்த 3 இளைஞர்களை சவூதியில் வேலையில் அமர்த்துவதாகக் கூறி ஒரு நிறுவனம் அழைத்துச் சென்றது.

இந்நிலையில், அந்நாட்டில் 3 பேரும் அவர்களது முதலாளியால் மரப்பலகையைக் கொண்டு தாக்கும் விடியோ வாட்ஸ் அப் வெளியானது. இதையடுத்து, அவர்களை மீட்கும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்தியர்கள்சவூதி அரேபியாசித்திரவதைசுஷ்மா ஸ்வராஜ்
Comments (0)
Add Comment