அதில் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலத்தவர்கள் மட்டும் 150 பேர் அல்ல என விளக்கப்பட்டுள்ளது. அந்த தகவல் தவறானது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெரிவித்துள்ள வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப், ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களைச் சேர்ந்தவர்களின் 10 உடல்கள் மட்டுமே சவுதியில் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
20 லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வருவதாகவும் இதனால் ஒவ்வொரு நாளும் 3 முதல் 4 பேர் வரை இயற்கையாகவே மரணம் அடைந்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
வழக்கமாக அனைத்து நடைமுறைகளையும் பூர்த்தி செய்து உடல்களை இந்தியா கொண்டுவர குறைந்தது 3 வாரங்கள் ஆவதாகவும் அவர் தெரிவித்தார். தற்கொலை, கொலை, பணி சார்ந்த விபத்து போன்ற ஆகிய எதிர்பாரா மரணங்கள் நிகழும் போது, விசாரணை நிறைவடைந்த பின்னரே உடல்களை கொண்டுவர முடியும் என்றும் அவர் தெரிவித்தார். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.