இந்நிலையில், சில நாட்களாக குறைவான அளவே சிக்கன் சப்ளை செய்யப்பட்டு தற்போது முற்றிலும் சப்ளை நிறுத்தப்பட்டுள்ளதால், 700 முதல் 900 வரையிலான கே.எப்.சி கடைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. நிலைமை சமாளிக்க வேறு இடங்களில் இருந்து சிக்கன் கொள்முதல் செய்ய முடியும். ஆனால், தரமே பிரதானம் என்பதால் நாங்கள் யோசிக்க வேண்டியதுள்ளது என கே.எப்.சி நிறுவனம் கூறியுள்ளது.
நிலைமையை சரிசெய்ய போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக டி.எச்.எல் நிறுவனம் தெரிவித்துள்ளது.