சிரியாவில் அமெரிக்கா 5 வான்தாக்குதல்களை நடத்தியது

ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளை குறி வைத்து ஈராக், சிரியாவில் அமெரிக்கா நேற்று 5 வான்தாக்குதல்களை நடத்தியது. இவற்றில் ஒன்று, சிரியாவின் எல்லையில் உள்ள அல்காயிமை தாக்கியது. பாக்தாத்துக்கு வெளியே 2 தாக்குதல்களும், இர்பில் நகருக்கு தென்கிழக்கில் 2 தாக்குதல்களும் அமைந்தன.

இந்த தாக்குதல்களில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆயுதம் தாங்கிய வாகனங்கள், பிற வாகனங்கள், ஆயுத கிடங்கு, நிலைகள் நிலைகுலைந்து போயின.

இந்த வான்தாக்குதல்களில் போர் விமானங்கள், வெடிகுண்டு வீசும் விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. தாக்குதல்கள் நடத்தி விட்டு இந்த விமானங்கள் பாதுகாப்பாக திரும்பி விட்டன. இந்த தாக்குதல்களால் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு பெருத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. உயிர்ப்பலி விவரம் உடனடியாக தெரிய வரவில்லை.

5 வான்தாக்குதல்களைஅமெரிக்காஈராக்ஐ.எஸ்.ஐ.எஸ்.குறிசிரியாவில்தீவிரவாதிகளைநடத்தியதுநேற்றுவைத்து
Comments (0)
Add Comment