சிறிலங்கா அரசுக்கு எதிராக சிறிலங்கா தலைநகர் கொழும்பில் போராட்டம்; எதிர்க்­கட்­சி­களின் எதிர்ப்பு இயக்கம் அறிவிப்பு

மகிந்த அரசின் ஊழல் மோச­டி­மிக்க ஆட்­சிக்கு எதி­ராக நாளைய தினம் போராட்டம் ஒன்று ந இடம்பெறும் என  எதிர்க்­கட்­சி­களின் எதிர்ப்பு இயக்கம் அறிவித்துள்ளது.  

குறித்த ஆர்ப்­பாட்டம் மரு­தானை, கொம்­ப­னி­தெரு, லிப்டன் சுற்­று­வட்டம் ஆகிய பகு­தி­க­ளி­லி­ருந்து ஆரம்­பிக்­கப்­பட்டு கொழும்பு ஹைட் பார்க்கில் ஒன்­று­கூ­ட­வுள்­ளது. இந்த ஆர்ப்­பாட்­டத்தில் அனைத்து தொழி ற்­றுறை சார்ந்த தொழிற்­சங்­கங்­களும் ஊட­க­வி­ய­லாளர் சங்­கங்­களும் கலந்து கொள்­ள­வுள்­ள­துடன் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான மக்களும் கலந்­து­கொள்ளவுள்ளார்கள் குறித்த ஆர்ப்­பாட்­டத்­தை­ய­டுத்து பொதுக்­கூட்டம் 2மணி க்கு ஹைட்­பார்க்கில் நடை­பெ­ற­வுள்­ளது.

இது தொடர்­பாக தேசிய ஊழியர் சங்க காரி­யா­ல­யத்தில் நேற்று நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டின் போதே எதிர்க்­கட்சி எதிர்ப்பு இயக்­கத்தின் ஏற்­பாட்­டா­ள­ரான கரு­ணா­சேன கொடித்­து­வக்கு கருத்து தெரிவிக்கையில்,

தற்­போது நாட்டில் என்­று­மில்­லாத வகையில் அநாச்­சாரம் அதி­க­ரித்­துள்­ளது. கசினோ சூதாட்­டத்தை இலங்­கையில் கொண்டு வந்து நாட்டின் கலா­சா­ரத்தை இவ்­வ­ர­சாங்கம் சீர­ழித்­துள்­ளமை மறைக்­கக்­கூ­டிய விட­ய­மல்ல.   எனவே இவ்­ அரசின் மோச­டி­மிக்க செயற்­பாட்டை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. அத்­துடன் தற்­போது மக்­க­ளு­டைய பணம் வீண் விரயம் செய்­யப்­ப­டு­கின்­றது.   மக்­க­ளுக்கு எவ்­விதப் பிர­யோ­ச­னமும் அற்ற வகையில் அபி­வி­ருத்­திப்­ப­ணிகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. மத்­தல விமான நிலையம், அம்­பாந்­தோட்டை மகிந்த ராஜபக்ச துறை­மு­கங்­க­ளினால் மக்கள் எவ்­வித நன்­மை­க­ளையும் பெற்­றுக்­கொள்­ள­வில்லை.

இது  மாத்­தி­ர­மின்றி மக்­க­ளு­டைய பணம் கார் ரேஸிற்கு செல­வி­டப்­ப­டு­கி­றது. இதற்கு அப்பால் அர­சாங்­கத்­தி­னதும் ஜனா­தி­பதி மகிந்த ராஜபக்சவி­னதும் செயற்­பா­டுகள் சர்­வா­தி­கார ஆட்­சி­களின் பண்­பு­களைக் கொண்­ட­வை­யாக காணப்­ப­டகின்றன என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த ஆர்ப்­பாட்­டத்­திற்கு ஐக்­கிய தேசிய கட்சி, மக்கள் விடு­தலை முன்­னணி, ஜன­நா­யக கட்சி, தமிழ்த்­தே­சி­யக்­கூட்­ட­மைப்பு, நவ­ச­ம­ச­மா­ஜக்­கட்சி, ஜன­நா­யக மக்கள் முன்­னணி, தேசிய ஐக்­கிய முன்­னணி உள்­ளிட்ட ஏனைய முக்­கிய சில அர­சியல் கட்­சி­களும் அனைத்து தொழிற்­றுறை சார்ந்த தொழிற்­சங்­கங்­களும் ஊட­க­வி­ய­லா­ளரின் சங்­கங்கள் உட்­பட பெரும்­பா­லான மக்கள் கலந்­து­கொள்­ள­தாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊழல் மோச­டி­சர்­வா­தி­காரஜனா­தி­பதிமகிந்தராஜபக்ச
Comments (0)
Add Comment