உலங்கெங்கும் வாழும் தமிழ் மக்கள் – ஈழத் தமிழர்களுக்கு நடந்த இனப்படுகொலைக்கு – சிறி லங்கா அரசிற்க்கு எதிராக சுயாதின சர்வதேச விசாரணை ஒன்று அவசியம் என்பதற்காக போராட்டங்கள் நடாத்திக் கொண்டிருக்கும் போது – அதே கணம் சிறிலங்கா அரசும் புலம் பெயர் மக்கள் அமைப்புகளுக்குள் உடுருவும் செயல்பாடுகளில் தமது கவனத்தை செலுத்திக்கொண்டிருகிறார்கள்.
இதில் ஒரு நிகழ்வாக பாரிஸ் புறநகர பகுதியான போண்டி (93) நகரில் கலாச்சார சங்கம் ஒன்றை நடாத்தி வரும் திரு ராஜேந்திரம் என்பவர் தமது சங்கத்தின் 2011 மற்றும் 2012 ஆண்டு விழாவிற்கு சிறி லங்கா அரசின் முக்கிய ராஜதந்தரியும், பிரான்சு நாட்டிற்கு மிக முக்கிய நோக்கத்துடன் அனுப்பப்பட்ட ராஜ்யப்பிரதிநிதி தயான் ஜயதிலகாவையும் அவர் மனைவியையும் அழைத்திருந்தார். சிறி லங்கா அரசின் ஊடுருவலுக்குள் ஆளாகிய பல தமிழர்கள், சிறி லங்கா அரச நிகழ்வுகளுக்கு சென்று ரத்தம் தோய்ந்த அந்த விருந்தோம்பலில் தம்மை இரையாக்கி கொண்டதை நாம் அறிவோம்.
அதே சூழலில் இன்று உலகெங்கும் தமிழ் மக்கள் ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்துக்கொண்டிருக்கும் நிலையில் – இந்தியாவில் அணைத்து தமிழ் கட்சிகளும், மாணவர் அமைப்புகளும் ஈழத் தமிழர் விடுதலைக்காக தெருக்களில் இறங்கி போராடும் நிலையில் பிரான்சு நாட்டில் பெப்ரவரி 23 ஆம் திகதி, காரைநகர் நலம்புரி சங்கம் தமது ஆண்டு விழாவிற்கு சிறி லங்கா தூதரகத்திற்கு அழைப்பு விடுத்ததோடு மட்டுமில்லாமல் தூதரக அதிகாரிகள் அனைவரையும் அழைத்து அவர்களை வரவேற்றும், வாழ்த்தியும் நன்றி தெரிவித்ததும்,
சிறி லங்கா அரசு ஈழத் தமிழர்களை வதைத்ததற்கும், படுகொலை செய்ததற்கும், எமது பெண்களை கற்பழித்தற்கும் நன்றி செலுத்துவது போல் இருந்தது. போண்டி ராஜேந்திரம், காரைநகர் நலன்புரி சங்க நிர்வாகிகள் இவ்வாறு சிறி லங்கா அரசிடம் தமிழ் மக்களின் வாழ்வை விலை பேசி நிற்;பதற்கு போண்டி வாழ் தமிழர்களும், காரைநகர் வாழ் தமிழர்களும் படுகொலை செய்யப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன சொல்லப்போகிறார்கள்?.