தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கு பொறுப்பான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால் வந்தடைந்தார். மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டே அவர் இலங்கைக்கு வருகைதந்துள்ளதாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.
புதிய அரசாங்கத்துடன் அவர் இருதரப்பு பேச்சு வார்த்தை நடத்துவதுடன் பிராந்திய விவகாரங்கள் குறித்தும் கலந்துரையாடுவார். என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது. அத்துடன், சிவில் சமூகத்தினர் மற்றும் மதத்தலைவர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகளையும் அவர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவிருக்கின்றார் என்று தெரியவருகின்றது.
அவர், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுடன் தற்போது சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திகொண்டிருகின்றார் என்று வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.