சிறீலங்காவில் எயிட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

சிறீலங்காவில் எயிட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த சில வருடங்களில் அதிகரித்திருப்பதை காண முடிவதாக பாலியல் நோய்கள் மற்றும் எயிட்ஸ் நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

பாடசாலை மாணவர்கள் மத்தியில் எயிட்ஸ் நோய் பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக பாலியல் நோய்கள் மற்றும் எயிட்ஸ் நோய் தடுப்பு பிரிவின் பணிப்பாளர் சிசிர லியனகே கூறியுள்ளார்.

பாதுகாப்பற்ற உறவுகள் அதிகரித்திருப்பது, எயிட்ஸ் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதை அறிய மேற்கொள்ளும் பரிசோதனைகள் அதிகரிப்பது என்பன எயிட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதை காட்டுவதற்கான காரணமாகும்.

2013 ஆம் ஆண்டு 196 எயிட்ஸ் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டதுடன் 2012 ஆம் ஆண்டு 180 பேர் அடையாளம் காணப்பட்டனர். அத்துடன் இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் மாத்திரம் 110 எயிட்ஸ் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பற்ற உடலுறவுகளே இதற்கு பெரும் காரணமாக அமைந்துள்ளது.எயிட்ஸ் நோயிக்கு உள்ளான 95 வீதமானவர்கள் பாதுகாப்பற்ற உடலுறவு காரணமாகவே நோயிக்கு ஆளாகியுள்ளனர்.இதனால், பாதுகாப்பற்ற உடலுறவுகளே நாட்டில் எயிட்ஸ் நோயாளர்கள் அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது.

15 முதல் 25 வயதிற்கு உட்பட்ட எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பாடசாலை மாணவர்கள் மத்தியிலும் எயிட்ஸ் நோய் பரவும் ஆபத்து இருப்பதை இது காட்டுகிறது என்றும் சிசிர லியனகோ குறிப்பிட்டுள்ளார்

அதிகரித்திருப்பதைஎண்ணிக்கைஎயிட்ஸ்கடந்தகாணசிறீலங்காவில்சிலநோயாளிகளின்முடிகின்றதுவருடங்களில்
Comments (0)
Add Comment