சிறீலங்காவில் மேலும் 95 ஏக்கர் காணியை வெளிநாட்டு நிறுவனம் ஒன்றுக்கு விற்பனை செய்யும் முயற்சிகளை பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மேற்கொண்டுள்ளார் என சிங்கள ஊடகம் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.
முதலீட்டு ஊக்குவிப்பு துறை அமைச்சின் ஊடாக இந்த நடவடிக்கையை அவர் மேற்கொண்டிருப்பதாக குறித்த சிங்கள ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது. இதன்படி நீர்கொழும்பில் உள்ள 25 ஏக்கர் காணியும், கிம்புலாபிட்டியவில் உள்ள 44 ஏக்கர் காணியும், பம்பலபிட்டியில் உள்ள 26 ஏக்கர் காணியும் விற்பனை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவற்றை சிங்கபூர் நிறுவனம் ஒன்றுக்கு விற்பனை செய்ய அமைச்சரவையில் கோரிக்கை முன்வைக்கப்படவுள்ளது. ஏற்கனவே கொழும்பின் பல பகுதிகளிலும் உள்ள காணிகளை பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அரசாங்கத்தின் அனுமதியுடன் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.