சிறீலங்காவில் வானில் இருந்து விழுந்த மர்ம கல்லுக்கு பலத்த காவற்துறை பாதுகாப்பு

சிறீலங்கா பொலனறுவை அரலகங்கவில பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட அடையாளம் காணப்படாத கல்லுக்கு இன்று 2014-01-27 திங்கட்கிழமை முதல் காவற்துறைப் பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது.

இதற்காக அரலகங்கவில காவற்துறை அதிகாரிகள் குழு ஒன்று அங்கு சென்றிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தப்பகுதியை தேசிய உரிமையாக அறிவிக்குமாறு இந்த கற்பகுதியை ஆய்வு செய்த இங்கிலாந்தின் பெக்கிங்ஹேம் பல்கலைகழகத்தின் பேராசியர் சந்திரா விக்ரமசிங்க கோரியுள்ளார்.

இது சம்மந்தமாக அவர் நேற்று ஜனாதிபதியை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தி இருந்தார். பொலனறுவை அரலகங்கவில பகுதியில் கடந்த வருடம் முதல் மீட்கப்பட்ட கற்கள் வேற்று கிரகங்களுக்கு உரியவை என்று அவர் முன்னதாகவே கூறி இருந்தார். எனினும் இது தொடர்பில் ஆராய்வினை மேற்கொண்ட பேராதனை பல்கலைக்கழகத்தின் குழு இந்த கருத்தை நிராகரித்து வருகின்றது.

கல்மர்மக்
Comments (0)
Add Comment