சிலி நாட்டின் மத்திய பகுதியில் இன்று 6.2 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று காலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.
இதேவேளை 6.4 ரிக்டராக கணிக்கப்பட்ட இன்றைய நிலநடுகத்தையொட்டி சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது..