தலைநகர் பெய்ஜிங், ஷாங்காய் உள்ளிட்ட பல பெரிய நகரங்களில் புகை மூட்டம் காணப்படுகிறது. மாசு காரணமாக சாலைகளில் நடந்து செல்ல முடியாத அளவு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மாசு காரணமாக மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில் அதிக அளவு நச்சுப்புகையை வெளியேற்றும் தொழிற்சாலைகள் கணக்கிடும் பணி நடந்தது. பெய்ஜிங், ஷாங்காய் ஆகிய நகரங்களை சுற்றியுள்ள 4 மாகாணங்களில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து அதிக அளவு புகை வெளியேறுவது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து இந்த குளிர்காலத்தில் 2 ஆயிரத்து 500 தொழிற்சாலைகளை மூட சீனா முடிவு செய்துள்ளது. அடுத்த ஆண்டு இதைவிட கூடுதலான தொழிற்சாலைகள் மூடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.