பிரத்தானியா ராணி எலிசபெத் சீன அதிகாரிகள் மரியாதையில்லாத வகையில் நடந்து கொண்டனர், முரட்டுத்தனமான நபர்கள் என கூறுவது போன்ற வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரத்தானியா ராணியின் சமீபத்திய 90-வது பிறந்த நாளை குறிக்கும் வகையில் பக்கிங்காம் அரண்மனையில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியின் போது Lucy D’Orsi என்னும் பொலிஸ் அதிகாரியுடன் ராணி கலந்துரையாடியுள்ளார், அவரிடம் ராணி சீனா அதிகாரிகளை குறித்து சர்ச்சைக்குள்ளான வகையில் பேசியுள்ளார். குறித்த வீடியோவில், ஸ்காட்லாந்து யார்ட் தளபதி Lucy D’Orsi, கடந்த ஆண்டு சீன ஜனாதிபதி ஜி மாநிலத்தில் பயணம் மேற்கொண்ட போது தான் தளபதியாக இருந்ததாக ராணியிடம் அறிமுகப்படுத்திக் கொண்டார்.
அப்போது கடந்த அக்டோபர் மாதம் சீன அதிபர் இங்கிலாந்து வந்தது சோதனையான நேரம், அவருடன் வந்தவர்கள் முரட்டுதனமாக நடந்து கொண்டனர் என்று தெரிவித்துள்ளார். இந்த காட்சி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
[youtube url=”https://www.youtube.com/watch?v=_N1278zagrk” width=”560″ height=”315″]