சுவிட்சர்லாந்தில் தீவிரவாதத்தை தடுக்க புதிய அதிகாரிகள் சேர்க்கப்படுவார்கள்

சுவிட்சர்லாந்தில் தீவிரவாதத்தை தடுக்க மத்திய புலனாய்வு துறையில் புதிதாக அதிகாரிகள் சேர்க்கப்படுவார்கள் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சுவிஸின் மத்திய புலனாய்வு துறையில், 3 வருடங்கள் நடைமுறையில் இருக்கும் வகையில் புதிதாக 6 பதவிகள் உருவாக்கப்பட்டு, அதில் திறமையான பாதுகாப்பு அதிகாரிகள் பணியில் அமர்த்தப்படுவார்கள் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த அதிகாரிகள் தீவிரவாதத்தை தடுக்கும் வகையிலும், அதை குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படும் வகையிலும் தீவிரமாக செயல்படுவார்கள் என பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், 26 மண்டலங்களில் உள்ள புலனாய்வு துறை அலுவலகங்களுக்கு தற்போது வழங்கப்படும் நிதியை விட கூடுதலாக 2 மில்லியன் பிராங்குகள் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மத்திய புலனாய்வு துறைக்கு கடந்த 2014ம் ஆண்டில் மட்டும் சுவிஸ் அரசு சுமார் 62.9 மில்லியன் பிராங்குகளை செலவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சுவிஸில் தற்போது எந்தவித தீவிரவாத தாக்குதலுக்கான அறிகுறிகள் இல்லை என்றாலும், பிரான்ஸில் நடந்த தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து முன்னெச்சரிக்கையாக இந்த புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் சுவிட்சர்லாந்து அரசு கடந்த 2014ம் ஆண்டு அல் கொய்தா மற்றும் ஐ.எஸ் தீவிரவாத இயக்கங்களை தடை செய்தது குறிப்பிடத்தக்கது.

அதிகாரிகள்அமைச்சகம்உள்துறைசுவிஸ்லாந்துசேர்ப்புதடுப்புதீவிரவாதம்துறைபுலனாய்வுமத்திய
Comments (0)
Add Comment