சுவிட்சர்லாந்து சூரிச் நகரில் அமைந்துள்ள பள்ளிவாசல் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். இவர்களில் இருவரின் நிலை கவலலைக்கிடமாக உள்ளது. இதேநேரம் பள்ளிவாசலுக்கு அருக்கில் உள்ள கட்டிடம் ஒன்றில் உயிரிழந்த நிலையில் ஒருவரின் உடலம் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.குறித்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.
காயமடைந்தவர்கள் 30, 35, 56 அகவையுடையோர் எனத் தொிவிக்கப்படுகிறது. இதேநேரம் தாக்குதல் நடத்திய நபர் 30 அகவை மதிக்கத்தக்கது என சம்பவத்தை நோில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.
தாக்குதல் நடத்தியவரை சுவிஸ் காவல்துறையினர் தேடிவருகின்றனர். இதேநேரம் தாக்குதலுக்கான காரணம் இதுவரை தெரிய வரவில்லை காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.