தலைநகர் மொகாடிஷுவிலுள்ள மேற்படி பள்ளிவாசலில் தொழுகை இடம்பெற்ற வேளையிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அந்தப் பள்ளிவாசல் இடிபாடுகளின் கீழ் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவ தாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் அந்தப் பள்ளிவாசலை புதுபிக்கும் நடவடிக்கைக்கு பொறுப்பாகவிருந்த பொறியியலாளர் அலட்சியமாக செயற்பட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அந்தப் பிராந்தியத்தில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்து வந்தமை குறிப்பிடத்தக்கது.