கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சர்வதேச ஒத்துழைப்புடன் இந்த விசாரணை நடத்தப்படும் என்றார். ஒன்றரை ஆண்டுக்குள் இந்த விசாரணை நிறைவடையும் என்றும் பல்வேறு கட்டங்களாக விசாரணை முன்னெடுக்கப்படும் என்று அவர் கூறினார்.
இந்த விசாரணை தொடர்பாக ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கும் வகையில் வரும் அக்டோபர் மாதம் 4 அம்ச திட்டம் வகுக்கப்படும் என்று மங்கள சமரவீர தெரிவித்தார்.
சர்வதேச சமூகத்திடம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற அப்போதைய அதிபர் மகிந்த ராஜபக்சே தவறிவிட்டதாகவும் அவரது உத்தரவுகளை பின்பற்றியதால்தான் இலங்கை ராணுவத்துக்கு இழுக்கு ஏற்பட்டுவிட்டதாகவும் சமரவீர கூறினார்.