ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நிறைவேற்று ஜனாதிபதி முறையை ரத்து செய்வது தொடர்பாக பல கட்ட செயற்பாடுகளுக்கு இணக்கம் தெரிவித்தார். அரசியமைப்பு திருத்தத்திலும் அந்த விடயம் உள்வாங்கப்பட்டதுடன் உயர் நீதிமன்றமும் அதில் உள்ள பல விடயங்களை அகற்றியது. அத்துடன் திருத்தங்களின் ஊடாகவேனும் எஞ்சியுள்ள ஜனாதிபதி அதிகாரங்களை வரையறுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது அவற்றை அகற்றுவதற்கு அரசியலமைப்பு சபையொன்றைக் கொண்டு வந்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.