ஜனாதிபதி ஆணைக்குழுவின் அடுத்த அமர்வுகள் திருகோணமலையில்

காணாமல்போனவர்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அடுத்த அமர்வுகள் திருகோணமலையில் நடைபெறவுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டபிள்யூ.குணதாச இதனைத் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 28ம் திகதியும் மார்ச் மாதம் 1,2 மற்றும் 3ம் திகதிகளில் திருகோணமலையில் அமர்வுகள் நடைபெறவுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இந்தக் ஆணைக்குழுவின் பதவிக்காலத்தை பெப்ரவரி மாதம் 15ம் திகதி வரையில் நீடித்திருந்தார். புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இந்த ஆணைக்குழுவின் தவணைக் காலத்தை மேலும் ஆறு மாத காலத்திற்கு நீடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமர்வுகள்ஆணைக்குழுவின்எச்.டபிள்யூ.குணதாசகாணாமல்போனவர்கள்செயலாளர்ஜனாதிபதிதிருகோணமலையில்தொடர்பானநடைபெறவுள்ளதாக
Comments (0)
Add Comment