ஜாம்பியா நாட்டின் அதிபர் மிச்சைல் சதா (வயது 77) ரகசிய நோய் காரணமாக லண்டனில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் சிகிச்சை பலனின்றி மாரட்டைப்பால் நேற்று இரவு மரணமடைந்தார்.
நமது அன்புக்குரிய தலைவர் மரணம் குறித்து அறிவிக்க எனக்கு கடினமான இதயம் வேண்டும் என அமைச்சரவை செயலாளர் ரோலண்ட் மிசிச்கா தெரிவித்தார். அடுத்த அதிபர் குறித்து ஜாம்பியன் நாட்டு அமைச்சரவை இன்று காலை கூடி முடிவு எடுக்கிறது.
அவர் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்புதான் ஜாம்பியா நாட்டின் 50 சுதந்திர தினத்தை இங்கிலாந்தில் வைத்து கொண்டாடினார். கிப்ங் கோப்ரா என அழைக்கப்பட்ட சதா ஜாம்பியா நாட்டின் அதிபராக 2011 இல் தேர்ந்து எடுக்கப்பட்டார்.