ஜிகாதிகளின் பரப்புரையை முஸ்லீம் தலைவர்கள் எதிர்க்க வேண்டும் – ஒபாமா

இளம்தலைமுறையினர் வன்முறையை பின்பற்றும் கடும்போக்குக் குழுக்களால் தீவிரவாதிகளாக மாற்றப்படுவதை தடுப்பதற்கு மேலதிகமாக செயல்படவேண்டியிருப்பதாக சர்வதேச மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்திருக்கிறார்.

இஸ்லாமிய மத நம்பிக்கையை மேற்குலகம் நசுக்கப்பார்க்கிறது என்கிற ஜிகாதிகளின் பரப்புரையை முஸ்லீம் தலைவர்கள் எதிர்க்க வேண்டும் என்று அவர் இந்த மாநாட்டில் அழைப்பு விடுத்திருக்கிறார்.

இஸ்லாம் மதத்துக்கு எதிராக அமெரிக்கா போர் தொடுக்கவில்லை என்றும், இஸ்லாமை கொச்சைப்படுத்தும் தீவிரவாத, பயங்கரவாத குழுக்களுக்கு எதிராகவே அமெரிக்கா போர் தொடுத்திருப்பதாகவும் ஒபாமா தெரிவித்தார்.

வாஷிங்டனில் நடக்கும் இந்த மூன்று நாள் மாநாட்டில் அறுபது நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் கலந்துகொண்டிருக்கிறார்கள். டென்மார்க், பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரேலியாவில் நடந்த சமீபத்திய தாக்குதல்களின் பின்னணியில் இந்த மாநாடு நடந்துகொண்டிருக்கிறது.

அதிபர்அமெரிக்காஇளம் தலைமுறைஇஸ்லாமியர்ஒபாமாகடும்போக்குகுழுசர்வதேசம்தீவிரவாதிநம்பிக்கைமதமாநாடுவன்முறை
Comments (0)
Add Comment