ஜிகா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்ட 3 பேர் உயிரிழப்பு

கொலம்பியாவில் ஜிகா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்ட 3 பேர் உயிரிழந்து விட்டதாக அந்நாட்டு சுகாதாரத்தறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.  

ஜிகா வைரசால் பாதிக்கப்பட்டு மரணம் ஏற்படுவது இதுவே முதல்முறை என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். உயிரிழந்த 3 பேரும் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருக்க கூடும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.   அண்மையில் கொலம்பியாவில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மரணமடைந்த மேலும் 6 பேரின் சடலங்களை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை நடத்தப் போவதாகவும் கொலம்பிய நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கொலம்பியில் மேலும் 20 ஆயிரம் பேர் ஜிகா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. இவர்களில் 2 ஆயிரம் பேர் கர்ப்பிணிகள். இதில் 3 பேரின் மரணம் அந்நாட்டு மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

ஜிகா வைரஸ் பாதிப்புக்குள்ளான நாடுகளில் கருக்கலைப்பு செய்வதற்கு   அனுமதி கோரும் ஐநா

ஜிகா வைரஸ் பாதிப்புக்குள்ளான நாடுகளில் வசிக்கும் பெண்கள் கருத்தடை, மற்றும் கருக்கலைப்பு செய்வதற்கு  அனுமதி அளிக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது.

தென் அமெரிக்க நாடுகளை தாக்கிய ஜிகா வைரஸ் தற்போது வட அமெரிக்க நாடுகளிலும் பரவத் தொடங்கியுள்ளது. தடுப்பூசியும், சிகிச்சையும் இல்லாத இந்த நோய், கர்ப்பிணிகளை முதல் 3 மாத கர்ப்ப காலத்தில் தாக்கினால், பிறக்கக்கூடிய குழந்தையின் தலை மிகவும் சிறிதாக இருக்கும் என்றும் மூளையில் பாதிப்பு ஏற்படும் என்றும் மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், கருத்தடை, மற்றும் கருக்கலைப்புக்கு ஜிகா வைரசால் பாதிப்புக்குள்ளான நாடுகள்  அனுமதி அளிக்க வேண்டும் ஐநா கோரிக்கை விடுத்துள்ளது. ஜிகா வைரஸ் பாதிப்புக்குள்ளான பெரும்பாலான நாடுகள்  கன்சர்வேட்டிவ் கத்தோலிக் நாடுகள் என்பதால், கருத்தடை மற்றும் கருக்கலைப்பிற்கு கடும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகாரிகள்உயிரிழப்புகொலம்பியாசுகாதாரத்துறைஜிகாதாக்குதல்பரபரப்புபாதிப்பு.வைரஸ்
Comments (0)
Add Comment