ஜிகா வைரஸ் பாதித்த நாடுகளுக்கு செல்ல வேண்டாம் என, மத்திய சுகாதார துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. கொசுக்களால் பரவும் ஜிகா வைரஸ், அமெரிக்கா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் வேகமாக பரவி வருகிறது.
குறிப்பாக கர்ப்பிணிகளை பாதிக்கும் இந்த வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில், உலகளாவிய அவசர நிலையை ஐநா சுகாதார அமைப்பு பிரகடனப்படுத்தி இருக்கிறது. கர்ப்பிணிகள் மற்றும் கர்ப்பமாகும் சாத்தியம் உள்ள பெண்கள், ஜிகா வைரஸ் பாதித்த நாடுகளுக்கு செல்ல வேண்டாம் என மத்திய சுகாதார துறை அறிவுறுத்தியுள்ளது.
மேலும், நீரிழிவு, ரத்த அழுத்தம், நாள்பட்ட மூச்சுக் கோளாறு உள்ளவர்கள், மருத்துவர்களின் ஆலோசனையை பெற வேண்டும் என்று தெரிவித்துள்ள அரசு, வைரஸ் பாதிப்புக்குள்ளான நாடுகளுக்கு செல்லும் எல்லா பயணிகளும், தனிப்பட்ட பாதுகாப்பு முறைகளை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.
ஜிகா வைரஸ் பாதித்தவர்களை தனிமைப்படுத்தி வைக்க தேவையான வசதிகள், விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் ஏற்படுத்தப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.