ஜெனிவாவில் சிறீலங்காவுக்கெதிராக கொண்டு வரவுள்ள தீர்மானத்தை எதிர்த்து பத்து இலட்சம் கையொப்பங்களை திரட்டும் ‘ஜனபல நெகும’ என்னும் நிகழ்ச்சித் திட்டமொன்று இன்று காலை தங்காலை ஹேனகடுவ ரஜமகா விகாரையிலிருந்து ஆரம்பமாகியுள்ளது..
மேல் மாகாண ஆளுநர் அலவி மெளலானா, தொழில் உறவுகள் அமைச்சர் காமினி லொக்குகே, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆகியோரின் வழிகாட்டலின் பேரில் இணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பு மற்றும் உதவிச் செயலாளர்களின் சங்கத்தினால் இந்த நிகழ்ச்சித் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் தங்காலையிலிருந்து கொழும்பு நோக்கி நடமாடும் வாகனக் கண்காட்சி, ஒருங்கிணைந்த வீதி நாடகக் காட்சி என்பனவும் நடத்தப்படவுள்ளன.
இன்று தங்காலையிலிருந்து வெலிகம வரையிலும், 15 ஆம் திகதி அஹங்கமவிலிருந்து பலப்பிட்டிய வரையிலும், 16 ஆம் திகதி அளுத்கமையிலிருந்து பாணந்துறை வரையிலும், 17 ஆம் திகதி மொறட்டுவையிலிருந்து பெல்லங்வில ரஜமகா விகாரை வரையிலும் ,18 ஆம் திகதியன்று பொரலஸ்கமுவ முதல் பேலியகொடை வரை, 19 ஆம் திகதியன்று கிரிபத்கொடையிலிருந்து கம்பஹா வரையிலும், 20 ஆம் திகதியில் ஏக்கல முதல் பேலியகொடை வரையிலும், 21 ஆம் திகதியன்று பேலியகொடை முதல் கோட்டை புகையிரத நிலையம் வரையிலும் இந்த பேரணி நடத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.