ஜெர்மனியில் இரசாயன பிலாண்டில் வெடித்து இருவர் பலி!

ஜெர்மனியின் மேற்குப் பகுதியில் உள்ள லுட்விக்ஷாஃபென் பகுதியில் உள்ள பி.ஏ.எஸ்.எஃப்பின் கெமிக்கல் பிளான்டில் நேற்று வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.

கப்பல் மூலம் ரசாயனங்கள் கொண்டு செல்வதற்கு குழாய் பாதை அமைக்கும் பணியின் போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.

உலகளவில் உள்ள மிகப்பெரிய கெமிக்கல் நிறுவனமாக திகழும், இந்த பி.ஏ.எஸ்.எஃப் பிராங்க்பர்ட்டின் தென் பகுதியின் 80 கிமீ தொலைவில் உள்ள லுட்விக்ஷாஃபென் பகுதியில் உள்ளது. கிட்டத்தட்ட 39 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஊழியர்கள் இந்த கெமிக்கல் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். ரின் ஆற்றில் அமைந்துள்ள இந்த கெமிக்கல் நிறுவனம், கப்பலிலிருந்து ரசாயனங்களை இறக்குமதி செய்கிறது.

இரசாயனம்கப்பல்குழாய்ஜெர்மனிபணிபலிபிலாண்டில்விபத்து
Comments (0)
Add Comment