ஜெர்மனியில் வன்முறை மோதல்களின்போது கிட்டத்தட்ட 350 பேர் கைது

ஜெர்மனிய நகரான ஃபிராங்ஃபேர்டில் நடந்த வன்முறை மோதல்களின்போது கிட்டத்தட்ட 350 பேரை கைது செய்துள்ளதாக ஜெர்மனிய பொலிஸார் கூறுகின்றனர். ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைமையிட திறப்பு விழாவில் முதலாளித்துவ எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடியிருந்த இடத்தில் வன்முறை வெடித்தது.

அதில் பொலீஸ் வாகங்கள் எரிக்கப்பட்டு, காவல் துறை அதிகாரிகள் மற்றும் தீயணைப்புத் துறை அதிகாரிகளும் தாக்கப்பட்டனர்.

இந்த எதிர்ப்பாளர்கள், ஐரோப்பாவின் பொருளாதார பிரச்சினைகளுக்கு, அந்த மத்திய வங்கியை குற்றஞ்சாட்டுவதன் மூலம் முக்கிய விடயத்தை தவறவிடுகிறார்கள் என்று அந்த திறப்பு விழாவில் பேசிய ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவர் மரியோ ட்ராஹி தெரிவித்தார்.

350ஃபிராங்ஃபேர்ஆர்ப்பாட்டக்காரர்கள்எதிர்ப்புஐரோப்பியகைதுஜெர்மனிஜெர்மனியதிறப்பு விழாநகர்பொலிஸார்மத்திய வங்கிமோதல்வன்முறை
Comments (0)
Add Comment