டென்மார்க்கின் வாழ்க்கைமுறைக்கு ஒவ்வாத விஷயங்களை குடியேறியவர்கள் செய்யக் கூடாது

டென்மார்க்கில் வந்து குடியேறியுள்ளவர்கள் முழுமையாக அந்நாட்டு வாழ்க்கைமுறையை உள்வாங்கிக் கொள்ள வேண்டும் என நாட்டின் அரசி மார்கெரெத்தே கோரியுள்ளார்.

குடியேறிகளை வரவேற்கும் கடமை தமது நாட்டுக்கு உள்ளது என்றாலும், அப்படி வருபவர்கள் நாட்டில் பெரும்பான்மையாக உள்ள சமூகத்தினருக்கு ஒவ்வாத விஷயங்களைச் செய்யக் கூடாது எனவும் டென்மார்க் அரசி கூறியுள்ளார்.

தலைநகர் கோப்பன்ஹேகனிலுள்ள யூத வழிபாட்டு மையத்தில் கருத்துச் சுதந்திரத்தை ஆதரிப்பது தொடர்பிலான ஒரு கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அங்கு புகுந்த இஸ்லாமியக் குழுவொன்றின் உறுப்பினர், இருவரை சுட்டுக் கொன்ற சம்பவம் நடைபெற்று இரண்டு மாதங்கள் ஆன நிலையில் அரசியின் இந்தக் கருத்து வந்துள்ளது.

தினசரி பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியிலேயே அவர் டேனிஷ் விழுமியங்கள் குறித்து பேசியுள்ளார்.

இந்த ஆண்டின் இறுதிப் பகுதியில் டென்மார்க்கில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதில் ”குடியேற்றம்” முக்கியமான ஒரு அம்சமாக விவாதிக்கப்படும் என்று செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.

அரசிஅரசி மார்கெரெத்தேகுடியேறிகள்டென்மார்க்நாடுவாழ்க்கைமுறை
Comments (0)
Add Comment