கெஜ்ரிவால் அரசுக்கு சாதமாக டெல்லி ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு!

இந்திய தலைநகரான டெல்லியில்  ஊழல் தடுப்புப் பிரிவுக்கு காவல்துறையினரையும் கைது செய்யும் அதிகாரம் உள்ளது என்று அம்மாநில உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பு கெஜ்ரிவால் அரசுக்கு சாதமாக அமைந்துள்ளது.

டெல்லியில் தொழிலதிபரிடம் லஞ்சம் கேட்டு மிரட்டியதாக அளித்த புகாரின் அடிப்படையில் அனில் குமார் என்ற போலீஸ்காரரை ஊழல் தடுப்பு அதிகாரிகள் கைது செய்தனர். இதையடுத்து அனில் குமார் ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், ஊழல் தடுப்பு புகார் தொடர்பாக தன் மீது நடவடிக்கை எடுக்க டெல்லி பிராந்திய ஊழல் தடுப்பு பிரிவுக்கு அதிகாரம் இல்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும் அவரது ஜாமின் மனுவை இன்று தள்ளுபடி செய்த நீதிபதி, கைது செய்யப்பட்ட காவல்துறையினர் டெல்லி குடிமகன் என்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க டெல்லி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஊழல் தடுப்பு பிரிவுக்கு அதிகாரம் உள்ளது என்றும், அவரிடம் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தலாம் என்றும் தீர்ப்பளித்தார்.  இந்த தீர்ப்பினை முதல் அமைச்சர் கெஜ்ரிவால் பாராட்டி வரவேற்றுள்ளார்.

அதிகாரம்ஊழல் தடுப்புப் பிரிவுகாவல்துறையினர்கெஜ்ரிவால்டெல்லிடெல்லி ஐகோர்ட்
Comments (0)
Add Comment