எடுத்துப் பேசியபோது மறுமுனையில் பேசியவர், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை வெடிகுண்டு வைத்து கொலை செய்வோம் என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார். இதையடுத்து போலீசார் வெடிகுண்டு நிபுணர்களுடன் கெஜ்ரிவாலின் அலுவலகம் மற்றும் வீட்டில் குண்டு ஏதாவது உள்ளதா என்று சோதனை நடத்தினர். சோதனையில் குண்டு எதுவும் சிக்கவில்லை.
இருப்பினும் கெஜ்ரிவாலின் வீடு மற்றும் அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கெஜ்ரிவாலுக்கு கொலை மிரட்டல் விடுத்த போன் அழைப்பு எங்கிருந்து வந்தது, யார் மிரட்டல் விடுத்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். டெல்லியில் தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருக்கையில் கெஜ்ரிவாலுக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது