ததேகூ நேரடிப் பேச்சுக்களை நடத்துவதற்கு அரசாங்கத்தின் உயர்மட்டம் தீர்மானித்துள்ளது

இலங்கை தீவில் நிலவும் இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விவகாரம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நேரடிப் பேச்சுக்களை நடத்துவதற்கு அரசாங்கத்தின் உயர்மட்டம் தீர்மானித்துள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசியல் தீர்வுக்கான இணக்கப்பாட்டை எட்டிக்கொள்வதற்கான பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் இடம்பெற முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திட்டவட்டமாகக் கூறி வருகின்ற நிலையில், அரசாங்கம் இவ்வாறான தீர்மானத்துக்கு வந்துள்ளதாக அரசாங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.அந்தவகையில் விரைவில் அரச தரப்பிலிருந்து நேரடிப் பேச்சுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

கடந்த வாரம் சிறிலங்காவுக்கு விஜயம் செய்த தென்னா­பி­ரிக்க பதில் ஜனா­தி­பதி சிறில் ரம­போஷா இரண்டு தரப்­பு­டனும் நட­த­திய பேச்­சு­வார்த்­தையின் பின்னர் அர­சாங்க மட்­டத்தில் கூட்­ட­மைப்­புடன் நேரடிப் பேச்சை நடத்­து­வது குறித்து தீவி­ர­மாக ஆராய்ந்­து ­வ­ரு­வ­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.அர­சாங்­கத்­துடன் நேரடிப் பேச்­சுக்­களை ஆரம்­பிப்­ப­தற்கும் தீர்வு ஒன்றை நோக்கி செல்­வ­தற்கும் கூட்­ட­மைப்பு அர்ப்­ப­ணிப்­புடன் இருப்­ப­தா­கவும் தென்­னா­பி­ரிக்க பதில் ஜனா­தி­பதி சிறில் ரம­போ­ஷா­விடம் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் தெரி­வித்­தி­ருந்தார்.

மேலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடனான சந்திப்பின்போது கூட்­ட­மைப்­புடன் நேரடிப் பேச்­சுக்கு தயாரா என்று சிறில் ரம­போஷா வின­வி­யி­ருந்தார். இது குறித்து சிந்­திக்­க­ வேண்­டி­யுள்­ள­தாக அதன்­போது ஜனா­தி­பதி கூறி­யி­ருந்தார்.

இந்த நிலையிலேயே கூட்டமைப்புடன் நேரடிப் பேச்சுக்களை நடத்துவது குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரா. சம்¬பந்தன்கூட்டமைப்பின்சிறில்ஜனாதிபதிதலைவர்தெரிவித்திருந்தார்.ரமபோஷாவிடம்
Comments (0)
Add Comment