ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் அமெரிக்கப் படைகள் தலிபான் தலைவர் முல்லா அக்தர் மன்சூரை குறிவைத்து தாக்குதல்களை நடத்தியது.
இந்த வான்வெளி தாக்குதலில் ஏற்பட்டுள்ள சேதம் குறித்து இன்னும் தகவல் இல்லை என்று பெண்டகன் செய்தி தொடர்பாளர் பீட்டர் கூக் தெரிவித்தார். இருப்பினும் மன்சூர் வான்வெளி தாக்குதலில் கொல்லப்பட்டுவிட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிபர் ஒபாமா இந்த வான்வெளி தாக்குதலுக்கு ஒப்புதல் அளித்திருந்தார். இதற்கு முன்பாகவே ஆப்கான் அரசு படைக்கும் தலிபான்களுக்கும் இடையே நடந்த சண்டையில் மன்சூர் இறந்துவிட்டதாக ஒரு முறை செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.