ஈராக் தலைநகர் பாக்தாத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 292 பேர் பலியாகினர். இதேபோல், பாக்தாத்தில் ஷியா பிரிவினரின் பிரபல மசூதியை குறிவைத்து நேற்றிரவு தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலுக்கு 35 பேர் உயிரிழந்தனர்.
ஐம்பதுக்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். பாக்தாத் நகரை பாதுக்காக்க தவறிய சிறப்புப் படையினரின் அஜாக்கிரத்தையால்தான் இதுபோன்ற தாக்குதல்கள் நடந்து வருவதாக குற்றம்சாட்டிய ஈராக் உள்துறை மந்திரி முஹம்மது கப்பான், தனது மந்திரி பதவியை சமீபத்தில் ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், பாக்தாத் நகர பாதுகாப்புத்துறை தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் அப்துல் அமிர் அல் ஷிமாரி மற்றும் அவருக்குகீழ் பணியாற்றிவந்த உயரதிகாரிகளை பணிநீக்கம் செய்து ஈராக் பிரதமர் ஹைதர் அல்-அபாடி இன்று உத்தரவிட்டுள்ளார்.