வாகன விற்பனை நிலையம், உணவு விடுதி, அடுக்குமாடி குடியிருப்பு ஆகிய இடங்களில் அந்த நபர் பலமுறை சுட்டார். இதில் 6 பேர் உயிரிழந்ததாகவும், 3 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கிட்டதட்ட 50 வயதுடைய அந்த நபர் நீல நிறக் காரில் வந்து இச்செயலில் ஈடுபட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.